’பாடகசாலை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான இனியா, சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த ‘வாகை சூட வா’ படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழில் சிறு இடைவெளி விட்ட இனியா, தற்போது ‘காபி’ என்ற படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதுவும் அதிரடியான போலீஸ் வேடத்தில். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் இனியாவின் போலீஸ் வேடமும், அவரது நடிப்பும் பெரிதும் பேசப்படுவதோடு, அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வலுவான படமாகவும் உருவாகியுள்ளதாம்.
பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்பவர் இயக்கத்தில், பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் ‘தாக்கோல்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் இனியா, ‘துரோணா’ என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாகியுள்ளார்.
கல்வியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் மூலம் இனியா கன்னட சினிமாவின் முன்னணி ஹீரோயினாவது உறுதியாம்.
மலையாளத்தில் மம்மூட்டியுடன் இனியா நடித்த ‘பரோல்’, ’பெண்களில்லா’ ஆகிய படங்களுக்காக சிறந்த இரண்டாம் கதாநாயகிக்கான கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் விருதும் பெற்றுள்ளாராம். பரோல் படத்துக்கு பிரேம் நசீர் விருதும், பெண்களில்லா படத்திற்கு டிவி சந்திரன் விருதும் கிடைத்திருக்கிறதாம்.
2018 ஆம் ஆண்டு அமர்க்களமான ஆண்டாக இருந்தை தொடர்ந்து, இந்த 2019 ஆம் ஆண்டு அதைவிடவும் அசத்தலாக இருக்கும், என்பதால் இனியா குஷியாக இருக்கிறாராம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...