பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக, நேற்று இரவு தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்துள்ள எஸ்.பி.பி, தனக்கு உடல் நிலை சரியில்லை என்பது வெறும் வதந்தியே என்று கூறியுள்ளார்.
இது குறித்து எஸ்,.பி.பாலசுப்பிரமணியம் கூறுகையில், “எனக்கு உடல் நிலை சரியில்லை என்று உலகம் முழுவதிலும் இருந்து போன் வருகிறது. நான் நலமாக இருக்கிறேன். சில சமூக வலைதளங்களில் எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதனால் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். சளி, இருமல் என்று மருத்துவமனைக்கு சென்றால் கூட, அதை பெரியதாக்கி உடல் நிலை மோசமாக இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு என் சகோதரி உயிரிழந்து விட்டார். அதற்காகதான் நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.
எதற்காக என்னைப்பற்றி வதந்திகளை பரப்புகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. தேவையில்லாத வதந்திகளால் பலரும் வருத்தமடைகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளை பரப்பாதீர்கள். நால் நலமாக இருக்கிறேன்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...