’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். தற்போது சில அடல்ட் படங்களிலும், பேய் படங்களிலும் யாஷிகா நடித்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா இருந்த போது, அவருடன் இருந்த சக போட்டியாளரான நடிகர் மஹத்தை காதலிப்பதாக கூறினார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த யாஷிகாவும், மஹத்தும் ஒன்றாக ஊர் சுற்றிய நிலையில் , இருவரும் காதல் பற்றி பேசமால் இருந்ததோடு, சில நாட்கள் சந்தித்துக் கொள்ளவும் இல்லையாம். இதற்கிடையே, மஹத்தும், யாஷிகாவும் பைக்கில் ஒன்றாக சுற்றுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாக, அது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மஹத்துக்கும், அவரது முன்னாள் காதலி துபாய் தொழிலதிபரான பிராச்சி மிஸ்ராவுக்கும் திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது யாஷிகாவை காதலிப்பதாக மஹத் கூறியதால், பிராச்சிக்கும் அவருக்கும் இடையே இருந்த காதல் முறிந்தது. ஆனால், பிக் பாஸ் விட்டை விட்டு வெளியே வந்த மஹத், பிராச்சியை சந்தித்து காதலை வளர்த்துக் கொண்டார்.
தற்போது, காதல் ஜோடிகளாக இருக்கும் மஹத் - பிராச்சி தம்பதிகளாக முடிவு செய்ததை தொடர்ந்து, இவர்களது பெற்றோர் திருமண நிச்சயதார்த்ததை முடித்துள்ளனர்.

காதலரின் இந்த திடீர் திருமண முடிவால், கழட்டிவிடப்பட்டிருக்கும் யாஷிகா தற்போது ரொம்பவே அப்செட்டாகியுள்ளாராம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...