தமிழ் சினிமாவின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய்க்கு அடுத்தப்படியாக குழந்தைகளை கவரும் ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். இதனால் தான், இவரது படங்களுக்கு நல்ல ஓபனிங் கிடைப்பதோடு, டிவியிலும் இவரது படங்கள் ஒளிபரப்பாகும் போது டி.ஆர்.பி உயர்கிறதாம்.
இப்படி முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதையும் வலியுறுத்தி நேற்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில், இன்று வாக்களிக்க சிவகார்த்திகேயன் சென்ற போது, அவரது பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை, என்று அதிகாரிகள் கூறி அதிர்ச்சியளித்திருக்கிறார்கள். பிறகு மீண்டும் மீண்டும் பட்டியலை சரி பார்த்த பிறகு சிவகார்த்திகேயன் பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவரை வாக்களிக்க அனுமதித்துள்ளனர்.
இதுபோல, நடிகர் ரோபோ ஷங்கர் பெயரும் வாக்களர்கள் பட்டியலில் இல்லை என்று கூற, அவர் வாக்களிக்காமல் திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...