பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ‘கும்கி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கும்கி 2’ என்ற தலைப்பில் பிரபு சாலமன் இயக்கி வருகிறார். இதில் இயக்குநர் லிங்குசாமியின் மருமகன் மதி என்பவர் ஹீரோவாக நடிக்க, நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ஹீரோயினாக நடிக்கிறார்.
கும்கியை காட்டிலும் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருவதால், இப்படத்தில் யானைகள் இடம்பெறும் காட்சிகள் பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், கும்கியில் ஒரு சில யானைகள் மட்டுமே படத்தில் காட்டப்பட்ட நிலையில், இப்படத்தில் யானை கூட்டங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தவும் பிரபு சாலமன் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, யானைகள் அதிகமாக உள்ள தாய்லாந்து நாட்டு வனப்பகுதியில் ‘கும்கி 2’ படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கியுள்ள பிரபு சாலமன், யானைகளுக்காக பல மாதங்களாகவே தாய்லாந்திலேயே முகாமிடவும் திட்டமிட்டுள்ளாராம்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...