கே.எல் புரொடக்ஷன்ஸ் சார்பில் கரிகாலன் தயாரிப்பில், வைகறை பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சியான்கள்’. மேற்குத் தொடர்சி மலைப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் 70 அறிமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஐ.இ.பாபுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு மப்பு ஜோதி பிரகாஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள இப்படம் குறித்து இயக்குநர் வைகறை பாலன் கூறுகையில், “நான் வளரும்போது பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டது தான் இந்த படம். இந்தப் படத்தில் 70 புதிய முகங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறோம், மேலும் அவர்கள் அனைவருக்கும் நீண்ட காலத்திற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 4 அல்லது 5 பிரபலமான முகங்கள் தவிர, அவர்கள் அனைவரும் புதியவர்கள். தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் படம் எடுத்தோம். அத்தகைய நீண்ட தூரத்துக்கு நாங்கள் பயணிக்க வேண்டியிருந்தது, தினமும் 2- முதல் 3 மணி நேரம் மட்டுமே படம் பிடிக்க முடிந்தது.
சியா என்பது தென் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில், வயதானவர்களை அழைக்க வழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. இங்குள்ள மக்களின் மகிழ்ச்சி, வலி மற்றும் உணர்வுகளை உள்ளடக்கிய அழகான வாழ்க்கையை திரையில் காட்ட நாங்கள் முயற்சித்திருக்கிறோம்.” என்றார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...