ரசிகர் மன்றங்கள் வேண்டாம், என்று அஜித் எப்போதே அறிவித்த போதிலும் அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. அவரது படங்க ரிலீஸாகும் போது பெரும் கொண்டாட்டத்தை நிகழ்த்தி வருபவர்கள், அஜித்தை ஒரு முறையாவது பார்த்துவிட மாட்டோமோ, என்று ஏங்குகிறார்கள்.
அஜித் தான் நடிக்கும் படங்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். இதனால், அவர் எங்கயாவது வருகிறார், என்று தெரிந்தால் ரசிகர்கள் கூட்டம் திரண்டுவிடுகிறது. அதுமட்டும் இன்றி அவரை சாலையில் எங்கயாவது பார்க்கும் ரசிகர்கள் பைக்கில் அவரது காரை பாலோ செய்யும் சம்பவங்களும் அவ்வபோது நிகழ்கிறது.
இந்த நிலையில், இன்று ஓட்டு போடுவதற்காக அஜித் வருவதை அறிந்த ரசிகர்கள் வாக்கு சாவடியில் அதிகாலையிலேயே குவிந்துவிட்டனர். பிறகு அஜித் வந்த பிறகு பெரும் கூச்சல் போட்ட அவர்கள், அஜித்தை வாக்கு சாவடியில் நுழையாதபடி செய்துவிட்டனர். பிறகு போலீசாரின் உதவியோடு வாக்குச் சாவடிக்குள் சென்று அஜித் ஓட்டுப் போட்டார்.
இத்துடன் விட்டார்களா. அஜித் காரில் வீட்டுக்கு செல்லும் போது, ஏராளமான ரசிகர்கள் இரு சக்கர வாகனங்களில் அவரை பின் தொடர் ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ அரசியல் கட்சி பேரணியை போல அஜித்தின் காரை சுற்றி ஏராளமான இரு சக்கர வாகங்கள் செல்ல, சாலையில் செல்பவர்களுக்கு இது பெரும் இடையூறாக அமைந்துவிட்டது.
ரசிகர்களின் இந்த மோசமான செயலால் அஜித் நிச்சயம் வருத்தப்படுவார், என்று அவரது ரசிகர்கள் பலர் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
ரசிகர்களின் மோசமான அந்த் செயல் இதோ,
ரசிகர்களின் தொல்லையில் இருந்து விடுபட நினைக்கும் அஜித்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார்கள்.
— CinemaInbox (@CinemaInbox) April 18, 2019
அதற்கான மற்றொரு சான்று இதோ
Fans Follow #Ajith #ElectionDay #Elecciones2019EC pic.twitter.com/XjXFhY8HOn
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...