விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை விமர்சித்ததோடு, ஒவ்வொருவருக்கும் அவர்களது வாக்கு என்பது எவ்வளவு முக்கியம் என்பது கூறியது.
விமர்சனம் ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வெற்றியடைந்து இப்படம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. மேலும், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஆளும் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்தது.
அதுமட்டும் இன்றி, ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் ஓட்டை இழந்தவர் வாக்களிக்கலாம், என்ற செய்தியை இப்படம் அழுத்தமாக கூறியது.
தற்போது, இந்த நிகழ்வு நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48 ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஓட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டன் 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.
சினிமா பொழுதுபோக்காக இருந்தாலும், அதில் நல்ல விஷயங்களை சொல்வதோடு, அது மக்களிடம் சேரும்படி சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட ‘சர்கார்’ படக்குழுவினரை இந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறதாம்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...