மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியான அஜித்தின் ‘விவேகம்’ மிகப்பெரிய சறுக்களை சந்தித்துள்ளது. படம் வெளியான முதல் காட்சிக்குப் பிறகே படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்ததால், அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்கள் கூட்டம் குறைந்துவிட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும், சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ந்து சிறப்பான வசூல் வந்துக்கொண்டிருக்க, சென்னை பாக்ஸ் ஆபிஸில் ‘பாகுபலி 2’ இரண்டு வாரங்கள் முடிவில் செய்த கலெக்ஷனைக் காட்டிலும் ’விவேகம்’ அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை நிகழ்த்தியது. மேலும், ரூ.150 கோடி வசூலித்த்டுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், விவேகத்தின் வசூல் சில இடங்களில் சிறப்பாக இருந்தாலும், ஒட்டு மொத்த வியாபரம் என்று பார்த்தால் பெரும் நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தெரிவித்துள்ளனர். மேலும், விவேகம் படத்தால் ஒட்டு மொத்தமாக ரூ.15 கோடி முதல் 28 கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
விவேகம் படத்தின் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் இந்த நஷ்ட்டம் மிகப்பெரிய இழப்பு என்பதால், நஷ்ட்டம் அடைந்தவர்களுக்கு நடிகர் அஜித்குமார் இழப்பீடு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சென்னை அல்லது திருச்சியில் கூட்டம் நடத்த இருப்பதாகவும் திருச்சி ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...