‘அட்ட கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.இரஞ்சித், தொடர்ந்து ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்று வெற்றிப் படங்களை கொடுத்த நிலையில் தற்போது வட இந்திய போராளி ஒருவரது வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையே, தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சாபில் பா.இரஞ்சித் தயாரித்த ‘பரியேறும் பெருமாள்’ மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து உடனடியாக, தனது இரண்டாவது படமாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ் ஹீரோவாகவும், ஆனந்தி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் மூன்றாவது படம் குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பத்ரி கஸ்தூரியின் ஷர்தா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.
பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்கும் இப்படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படத்தின் முதல் கட்டப்பணிகள் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...