திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திய ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர், தற்போது தொடர்ந்து நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை ‘பாபநாசம்’ பட இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்குகிறார். இதில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா - தம்பியாக நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தில், கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் கார்த்திக்கு சத்யராஜ் அப்பாவாக நடித்திருந்தாலும், நடிகை ஜோதிகாவுக்கு அவர் அப்பாவாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
தற்போது இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் பிற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குடும்ப செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...