சிவா இயக்கத்தில் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. ரஜினியின் ‘பேட்ட’ யுடன் போட்டி போட்டு வெற்றிப் பெற்ற அஜித், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்திவிட்டார்.
சிவா - அஜித் கூட்டணியில் தொடர்ந்து வெளியான மூன்று படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், இவர்கள் இணைந்த நாகாவது படமான ‘விஸ்வாசம்’ எப்படி இருக்குமோ! என்று அஜித் ரசிகர்கள் பெரும் கவலையில் இருக்க, படம் வெளியாகி அத்தனை பேரது கவலையையும் காற்றில் பறக்கவிட்டது போல, வெளியான அனைத்து இடங்களிலும் சூப்பர் டூப்பட் ஹிட்டானது.
தற்போது 100 நாட்களை கடந்திருக்கும் ‘விஸ்வாசம்’ தமிழகத்தின் சில திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
‘விஸ்வாசம்’ படத்தின் 100 வது நாளை அஜித் ரசிகர்கள் பல இடங்களில் கொண்டாடி வரும் நிலையில், மிக பிரம்மாண்டமான ஒரு வெற்றிவிழா நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...