இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா’ சீரிஸ் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் தனி இடம் உண்டு. பயத்தோடு பார்க்கும் பேய்ப் படங்களை சிரித்துக் கொண்டே பார்க்க வைத்தவர் ராகவா லாரன்ஸ். அவரது ‘காஞ்சனா’ படம் தான் பேய் படத்திலும் காமெடி ஒர்க் அவுட் ஆகும் என்பதை நிரூபித்து காட்டியதோடு, தமிழ் சினிமாவின் டிரெண்ட்டாகவும் மாற்றியது.
அந்த வகையில், ‘முனி’ யின் நான்காம் பாகமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு மட்டும் இன்றி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வெளிநாடுகள் என மொத்தம் 2600 திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘காஞ்சனா 3’ படம் மிகப்பெரிய ஓபனிங்கோடு வெளியாகி ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
திகில், காமெடி, மாஸ் என அனைத்தும் கலந்த ஹைடெக் ஹாரார் படமாக உள்ள ‘காஞ்சனா 3’ யை பார்த்த ரசிகரகள், “படம் சூப்பர்...கமெடி செம..” என்று கூறி வருவதோடு, கோடை விடுமுறையில் குடும்பத்தோடு பார்க்ககூடிய படமாக இருப்பதாகவும்க, விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...