‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறார். பாராளுமன்ற தேர்தலுக்காக நேற்று சென்னைக்கு வந்தவர், தனது ஓட்டைப் பதிவு செய்தார்.
இதற்கிடையே, இன்று மீண்டும் மும்பை சென்ற ரஜினிகாந்த் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் எப்போது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பது எனக்கு புரிகிறது. அவர்களை ஏமாற்ற மாட்டேன்.” என்றார்.
மேலும், மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா? என்று கேட்டதற்கு, இந்த கேள்விக்கு மே 23 ஆம் தேதி பதில் தெரிந்துவிடும், என்றார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...