தமிழ் சினிமாவில் எப்போதும் வெற்றி பார்முலா என்றால் அது பேய் படங்கள் தான். அதிலும், தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய டிரெண்டாகியுள்ள பேய் படங்களில் முன்னணி ஹீரோக்களும், ஹீரோயின்களும் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால், பேய் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இப்படி முன்னணி ஹீரோயின்களும், ஹீரோக்களும் பேய் படங்களுக்கு காத்துக் கொண்டிருக்க, நடிகை ஒருவரோ பேய் படங்கள் என்றாலே அலறியடித்து ஓடுகிறாராம்.
அவர் வேறு யாருமல்ல லட்சுமி ராய் என்ற தனது பெயரை தற்போது ராய் லட்சுமி என்று மாற்றிக் கொண்டவர் தான்.
காஞ்சனா, சவுகார்பேட்டை என சில பேய் படங்களில் நடித்திருக்கும் ராய் லட்சுமிக்கு தொடர்ந்து பேய் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறதாம். ஹீரோக்களுடன் டூயட் பாடி கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வர நினைத்தால், இப்படி பேய் பிடித்து ஆட வைக்கிறார்களே, என்று பீல் பண்ணும் ராய் லட்சுமி, இனி பேய் படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறாராம்.

அதனால், தன்னை தேடி வந்த இரண்டு பட வாய்ப்புகளை நிராகரித்தவர், நடிக்காமல் வீட்டில் சும்மா இருந்தாலும் இருப்பேன், பேய் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன், என்று கூறி பேய் கதை சொல்பவர்களை பேயாகவும் விரட்டியடிக்கிறாராம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...