தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாராவை ரசிகர்கள் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கின்றனர். அதற்கு ஏற்றவாறு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக தொடர் வெற்றி படங்களையும் கொடுத்டு வரும் நயனின் படங்கள் வசூலில் சக்கைபோடு போடுகிறது.
இந்த நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே அதிக மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் நயன்தாரா, பங்கேற்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசன் மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால் அந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் நிறுவனம், வேறு பிரபலத்தை வைத்து நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.
மேலும், பிக் பாஸ் சீசன் 3 விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யபடாமல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கலர்ஸ் டிவியில் விரைவில் நயன்தாராவை காணலாம், என்று அந்த தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால், அநேகமாக நயன்தாராவை வைத்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக பரவலாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், நயன்தாராவுக்கு இருக்கும் மாஸுக்கும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் கிரேஷுக்கும் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதால், நயன்தாராவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க கலர்ஸ் டிவி அனைத்து விதத்திலும் முயற்சிக்கும், என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆக, மொத்தத்தில், கலர்ஸ் டிவியில் வர இருக்கும் நயன்தாரா, நிச்சயம் அதிரடியாக தான் வருவார் என்பதால் பிக் பாஸாக வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறதாம்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...