தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று தனி இடம் உண்டு. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூட பேய் படம் என்றால் தைரியமாக முதலீடு செய்வார்கள். காரணம், மினிமம் கியாரண்டயாக இருப்பதால் தான்.
அதிலும் சில பேய் படங்களுக்கு ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும். அந்த வரிசையில் முக்கியமான படம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’. ஏற்கனவே வெளியான காஞ்சனா முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெற்ற வெற்றியால் ‘காஞ்சனா 3’ பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பு இருந்தது. இதை உணர்ந்த ராகவா லாரன்ஸ், முதல் இரண்டு பாகங்களில் இல்லாத சில பிரம்மாண்ட விஷயங்களையும், சர்பிரைஸ் விஷயங்களையும் ‘காஞ்சனா 3’ யில் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘காஞ்சனா 3’ மிகப்பெரிய ஓபனிங் பெற்றிருக்கிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ் காட்சிகளாக ஓடுவதோடு, ரசிகர்கள் குடும்ப குடும்பமாக பார்க்கவும் தொடங்கியுள்ளார்கள்.
மேலும், சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலைவிட அதிகமாக வசூலித்து ‘காஞ்சனா 3’ அதிரடி காட்டியிருக்கிறது.
அதாவது, விஸ்வாசம் வெளியான முதல் நாளில், திருச்சியில் ரூ.17.5 லட்சம் வசூல் செய்தது. தற்போது ‘காஞ்சனா 3’ திருச்சியில் ரூ 17.7 லட்சம் வசூல் செய்துள்ளது.

இதனால், வசூலில் அஜித்தை முதல் முறையாக நடிகர் ராகவா லாரன்ஸ் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...