தமிழ் சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிம்பு, சில நேரங்களில் சில வம்புகளில் சிக்குவது வழக்கம். அதிலும் காதல் வம்புகளில் சிக்குவது ஏராளம். நயன்தாரா, ஹன்சிகா என்று இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தவர், வெளியே தெரியாத காதல் தோல்விகள் பல இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதற்கிடையே, கோலிவுட்டின் இளம் ஹீரோக்களான ஆர்யாவுக்கு திருமணம் நடைபெற்று விட்டது. விஷாலுக்கு விரைவில் நடக்க இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் சீனியரான சிம்புவுக்கு எப்போது திருமணம், என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
அதே சமயம், சிம்புவின் தம்பியான குறளரசனுக்கு இம்மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக டி.ராஜேந்திர சினிமா பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அவர் அழைப்பிதழ் கொடுக்கும் இடங்களில் எல்லாம் சிம்புக்கு எப்போது திருமணம், என்று தான் கேட்கிறார்களாம்.
இந்த நிலையில், சிம்பு திருமணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் டி.ராஜேந்தர் கூறுகையில், “எல்லோரும் சிம்பு திருமணம் பற்றி கேட்கிறார்கள். அவருடன் நடித்த பெண்ணை திருமணம் செய்து வைப்பதைவிட பிடிச்ச பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன்.
சிம்புவிற்கு பொருத்தமான, ஜாதகம் பொருந்திய பெண்ணை பார்த்து வருகிறேன். விரைவில் இறைவன் அருளால் அவருக்கு பெண் கிடைக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...