திரையுலகில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து சமீபகாலமாக பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறி வருகிறார்கள். மீ டூ என்ற பெயரில் நடிகைகள் சிலர் கூறிய பாலியல் புகாரில், பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களின் பெயரும் அடிபட்டது.
இதற்கிடையே, சினிமா துறையில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து விசாரிக்க தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும், என்று முன்னணி நடிகைகள் பலர் நடிகர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், மீ டூ ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நடிகர் சங்கம் அமைத்துள்ளது. இந்த குழுவுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், கார்த்தி, பூச்சி முருகன், நடிகைகள் குஷ்பூ, ரோஹினி, சுஹாசினி மற்றும் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் உள்ளிட்ட 8 பேர்களை உறுப்பினர்களாகவும் நியமித்துள்ளனர்.

நடிகைகள் தங்களுக்கு யார் மூலமாக பாலியல் தொல்லை ஏற்பட்டாலும், இந்த குழுவில் புகார் அளிக்கலாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...