தமிழ் சினிமாவின் இளம் தலைமுறை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவரது படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருப்பதால், இவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், கடந்த சில படங்களில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் வருவது போல படத்தின் குறைந்த காட்சிகளில் மட்டுமே வந்ததால், இவர் படங்கள் மீது ரசிகர்களுக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு குறைய தொடங்க்இயுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையிலான ஒரு படம் தான் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி திருநங்கையாக வித்தியாசமான் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தாலும், படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் நடிப்பு குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்ததோடு, படத்தின் மீதும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், ‘சூப்பர் டீலக்ஸ்’ படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரியுடன் கேரோ வேனில் நடித்த லூட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி பெண் வேடத்தில், நடிகை காயத்ரியுடன் பழைய பாட்டு ஒன்றுக்கு டேன்ஸ் ஆடும் அந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ,
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...