தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் முகாமிட்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், தனது சொந்த வாழ்க்கை திரைப்படத்திலும் நடித்து வரும் ஸ்ரீரெட்டி, அப்படத்தின் மூலம் பலரது உண்மை முகத்தை வெளியே காட்டப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவை பாராட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி, ”தான் ஒரு வருடமாக சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
அதாவது, தெலுங்கு நடிகைகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்ய, ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட குழு ஒன்றை தெலுங்கானா அரசு அமைத்துள்ளது. இந்த குழிவில் நடிகைகள், பெண் இயக்குநர், பேராசிரியை, பெண் மருத்துவர்கள் மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
தெலுங்கானா அரசின் இந்த அறிவிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கும் ஸ்ரீரெட்டி, “தெலுங்கானா அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது. திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார். வேசி என அழைக்கப்பட்ட நான் இதன் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டேன். ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...