தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராகவும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ள நடிகர் விஷால், கமல்ஹாசனின் தூண்டுதலின் பேரிலேயே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் போட்டியிட்டதாக கூறப்படும் நிலையில், கமலுடனே விஷால் மோதும் காலம் வந்துவிட்டதாகவும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனா, இந்த மோதல் சினிமாவில் அல்ல அரசியலிலாம்.
ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதி உடல் நலக்குறைவால் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாலும் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜினிகாந்த் தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக பேசி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துக்களை கூறி வந்த கமல்ஹாசனும், தற்போது நேரடியாக அரசியல் குறித்து பேசுவதோடு, தனது ரசிகர்களை அரசியலில் ஈடுபட தயாராக இருக்கும்படியும், கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனால், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் நிச்சயம் அரசியலுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், விஷால் சத்தமே இல்லாமல் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது அம்மா பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ள விஷால் அதன் மூலம் நலிந்த சினிமா கலைஞர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, ஏழை எளிய மாணவர்களுக்கும் பல உதவிகள் செய்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் அரசியல் தொடர்பான பிரம்மாண்ட கூட்டம் ஒன்றை விஷால் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் இது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது.
அப்படி விஷால் அரசியலில் ஈடுபட்டால், அரசியலில் ஈடுபடும் கமல்ஹாசனுடன் அவர் மோத வேண்டியதாகிவிடும். அதே சமயம், கமல்ஹாசனும் விஷால் இணைந்துவிட்டால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிடும் என்பதும் நிச்சயமே.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...