தமிழ் சினிமாவின் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்.
முதல் படத்திலேயே தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ என இரண்டு பொருப்புகளை ஏற்று, இரண்டிலும் வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, தொடர்ந்து தான் ஹீரோவாக நடிக்கும் படங்களை தயாரிக்கவும் செய்தார். இதற்கிடையே, ’சைத்தான்’, ‘அண்ணாதுரை’, ‘காளி’, ‘திமிரு புடிச்சவன்’ என விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்ததால் அவர் பல கோடி கடனாளியாகிவிட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து, கடன் சுமையில் சிக்கி தவிக்கும் விஜய் ஆண்டனி, இனி சொந்தமாக படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னையின் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதியான போட் கிளப்பில் புதிய வீடு ஒன்றை கட்டி விஜய் ஆண்டனி குடியேறியுள்ளார். ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் பல அதிநவீன வசதிகள் உள்ளதாம்.
இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், பல கோடி கடனளில் சிக்கி தவித்த விஜய் ஆண்டனி, எப்படி இத்தனை கோடிகளில் வீடு கட்டின்னார், என்று ஒட்டுமொத்த கோலிவுட்டே அதிர்ச்சியில் உரைந்துவிட, வீடு கட்டிய கடனை தான் படம் எடுத்ததாக சொல்லிவிட்டாரோ, என்றும் பேசி வருகிறார்களாம்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...