இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவலாயங்களில் நேற்றி ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
கிறிஸ்தவ தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த சினமான் கிராண்ட் ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் தங்கியுள்ளார். குண்டு வெடிப்புக்கு சிறிது நேரத்திற்கு முன்பு தான் அவர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். இதனால், நூலிழியில் அவர் உயிர் தப்பியுள்ளார்.

இது குறித்து ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “இலங்கையில் குண்டுவெடிப்பா, கடவுள் நம் அனைவருடனும் இருக்கிறார். கொழும்பு சினமான் கிராண்ட் ஹோட்டலில் இருந்து நான் இப்போது தான் கிளம்பினேன், அதற்குள் அங்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...