ரசிகர்களின் செயலால் வருத்தமடைந்த ராகவா லாரன்ஸ்!
Monday April-22 2019

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு மிகப்பெரிய ஓபனிங் ‘காஞ்சனா 3’ படத்திற்கு கிடைத்திருக்கிறது. மேலும், படம் வெளியான 2 நாட்களில் ரூ.53 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

 

Kanchana 3

 

இதற்கிடையே, படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரசிகர் ஒருவர், கிரேன் மூலமாக தூக்கு காவடி எடுத்து வந்து லாரன்ஸின் கட் அவ்டுக்கு பாலபிஷேகம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்த நிலையில், ரசிகரின் பாலிபிஷேகம் வீடியோவை பார்த்த லாரன்ஸ், பெரும் வருத்தமடைந்ததோடு, தனது ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

 

இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர் ஒருவர் இதுபோன்று கிரைன் மூலமாக எனது கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் வீடியோவை பார்த்து மிகவும் வருத்தமடைகிறேன். எனது ரசிகர்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செய்களில் ஈடுபடாதீர்கள். உங்களது அன்பை வெளிப்படுத்த உங்களது வாழ்க்கையை பணயம் வைக்கும் இது போன்ற செயல்கள் தேவையில்லை. உங்களளுக்காக ஒரு குடும்பம் இருக்கிறது. இதுபோன்று செய்வதற்கு முன்பாக அவர்களை பற்றி சிந்தியுங்கள்.

 

ஒருவேளை என் ரசிகராக உங்களது அன்பை வெளிப்படுத்த விரும்பினால், கல்வி கற்க கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள், தேவையான குழந்தைகளுக்கு புத்தகங்களை வாங்கிக் கொடுங்கள். மூத்தோர் பலர் இங்கு உணவின்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவளியுங்கள். அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். 

 

எனவே இதுபோன்ற ஆபத்தான செயல்களை மறுபடி செய்ய வேண்டாம் என்பதே எனது கோரிக்கை. உங்கள் வாழ்க்கையே முக்கியம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

 

Related News

4674

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery