வெற்றி பெற்றவர்களுடன் மட்டுமே இணைய விரும்பும் ஹீரோக்கள் மத்தியில் தொடர்ந்து இரண்டு தோல்விப் படங்களை கொடுத்த இயக்குநர் ஒருவருடன் இணைந்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு.
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘நெருப்புடா’ நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் அடுத்ததாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை இயக்கும் தினேஷ் செல்வராஜ், ஏற்கனவே ‘கத்திக்கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ ஆகியப் படங்களை இயக்கியிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் தோல்வியை தழுவிய நிலையில், இவருக்கு மூன்றாவது வாய்ப்பாக விக்ரம் புரபுவின் கால்ஷீட் அமைந்திருக்கிறது.
தினேஷ் செல்வாஜ் இயக்கிய ‘கத்திக்கப்பல்’, ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ படங்கள் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. அவரது மூன்றாவது படமான இப்படம் பிரம்மாண்டத்திற்கு பேர்போன தாணுவின் தயாரிப்பு என்பதாலும், விக்ரம் பிரபு ஹீரோ என்பதாலும், தவறவிட்ட வெற்றியை இந்த முறை தினேஷ் செல்வராஜ் கெட்டியாக பிடித்துக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் தினேஷ் செல்வராஜ், பிரபல கதையாசிரியர் செல்வராஜின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...