ஹீரோ மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு முதல் முறையாக வில்லன் வேடத்தில் நடிக்கிறார். வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை நடிகர் நிதின் சத்யா, தனது ஷ்வேத் - எ நிதின் சத்யா புரொடக்ஷன்ஸ் ஹவுஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தில், ‘தெய்வமகள்’ சீரியல் புகழ் வாணி போஜன் ஹீரோயினாக நடிக்க, ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் வைபவ் போலிஸ் அதிகாரியாக நடிக்க, அவரை தெறிக்கவிடும் வில்லனாக இயக்குநர் வெங்கட் பிரபு நடிக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை எஸ்.ஜி.சார்லஸ் இயக்குகிறார். இவர் இயகுநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
இன்னும் தலைப்பு வைக்காத இப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைக்க, சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பு செய்ய, ஆனந்த் மணி கலையை நிர்மாணிக்கிறார். மிராக்கல் மைக்கேல் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார்.
70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் டைடில் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...