தமிழ் சினிமாவில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் விமர்சிக்கும் படங்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், அரசியலை நார் நாராக கிழிப்பதற்காகவே ஒரு படம் உருவாகி வருகிறது.
‘ஒபாம உங்களுக்காக’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ‘அது வேற, இது வேற’ படத்தை தயாரித்த ஜே.பி.ஜே பிலிம்ஸ் எஸ்.ஜெயசீலன் தயாரிக்கிறார்.
இப்படத்தில் பிருத்விராஜ் மற்றும் கனகராஜ் இருவரும் இதுவரை நடித்திராத புது கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக அறிமுக நடிகை பூர்ணிஷா நடிக்கிறார். இயக்குநர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், ரமேஷ் கண்ணா ஆகியோர் இயக்குநர்களாகவே நடிக்க, தயாரிப்பாளர் டி.சிவா, நித்யா, ராம்ராஜ், தளபதி தினேஷ், செம்புலி ஜெகன், கயல் தேவராஜ், விஜய் டிவ் புகழ் கோதண்டம், சரத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்திருப்பதோடு, ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியுள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். பி.லெனின் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் நடனம் அமைக்க, தளபதி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை பெஞ்சமின் கவனிக்கிறார்.
‘பாஸ்மார்க்’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் தனது பெயரை நாநிபாலா என்று மாற்றிக் கொண்டு இப்படத்தை இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் நாநிபாலா கூறுகையில், “தாமஸ் ஆல்வா எடிசன் போனை கண்டு பிடித்தது பேசுவதற்காகத் தான். ஆனால் ஆண்ட்ராய்ட் மொபைலில் பார்க்க முடியாததோ, சாதிக்க முடியாததோ எதுவும் இல்லை என்றாகி விட்டது. ‘ஒபாமா உங்களுக்காக’ படத்தின் கதையின் நாயகனாக செல்போன் ஒன்று முக்கியமாக இடம் பெறுகிறது. அரசியலை கிழித்து நார் நாராகத் தொங்க விடும் படமாக இது இருக்கும்.” என்றார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...