”உங்களுடன் நடிப்பவர்கள் இறந்துவிடுகிறார்கள்”! - விமர்சனத்தால் அப்செட்டான பிரியா ஆனந்த்
Tuesday April-23 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவாக இருந்த பிரியா ஆனந்த், ‘எதிர் நீச்சல்’ படத்திற்கு பிறகு ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தவர், தீடிரென்று தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். காரணம் கேட்டால், நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன், என்று கூறினார்.

 

மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் சில படங்களில் நடித்தவர், சிறு இடைவெளிக்குப் பிறகு ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

 

இதற்கிடையே, ‘எல்.கே.ஜி’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த ஜே.கே.ரித்தீஷ், திடீர் மாரடைப்பால் சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மரணம் சினிமா உலகிற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

 

இந்த நிலையில், பிரியா ஆனந்துடன் நடிப்பவர்கள் இறந்து விடுவார்கள், அவர் ஒரு அதிஷ்ட்டம் இல்லாத நடிகை, என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் விமர்சித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அந்த ரசிகர் வெளியிட்ட பதிவில், “உங்களுடன் நடித்த ஸ்ரீதேவி, LKG படத்தில் நடித்த ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் தற்போது மரணம் அடைந்துவிட்டனர். பிரியா ஆனந்த் ராசி இல்லாதவர்.” என்று பதிவிட்டுள்ளார்.

 

ரசிகரின் இத்தகைய பதிவால் ரொம்பவே அப்செட்டான பிரியா ஆனந்த், “வழக்கமாக இப்படிபட்ட நபர்களுக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது மிகவும் insensitiveவான ஒரு விமர்சனம். சமூகவலைத்தளத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு இப்படி எளிதில் பேசிவிடலாம். ஆனால் உங்களை தரக்குறைவாக பேசப்போவதில்லை” என்று அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார்.

 

தவறை உணர்ந்த அந்த ரசிகர் பிரியா ஆனந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

 

 

Related News

4686

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery