Latest News :

துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
Thursday September-07 2017

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படம் மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் எமி ஜாக்சன் ஹீரோயினாக நடிக்க, பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில், விளம்பர பணிகளையும் மிக பிரம்மாண்டமான முறையில் செய்ய தயாரிப்பு குழு திட்டமிட்டுள்ளது.

 

ராட்சத பலூன் படத்தின் விளம்பரம் அச்சிடப்பட்டு, அந்த பலூர் உலகம் முழுவதும் சுற்றிவரும்படி செய்யப்பட்டது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு, டிரைலர் வெளியீட்டு போன்றவற்றை வித்தியாசமான முறையிலும், பிரம்மாண்டமான முறையில் நடத்த லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

அதன்படி, ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் மாதம் துபாயில் நடத்த முடிவு செய்துள்ள லைகா நிறுவனம், படத்தின் டீசரை நவம்பர் மாதத்தில் ஐதராபாத்திலும், டிசம்பர் மாதம் படத்தின் டிரைலரை சென்னையிலும் வெளியிட நடத்த உள்ளது.

 

இது குறித்த தகவலை லைகா நிறுவனத்தின் முதன்மை தலைமை அதிகாரி மகாலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

469

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery