சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பிரபலமாக இருந்த ஜே.கே.ரித்தீஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால மரணமடைந்த சம்பவம் தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது நடிகை ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு 3டி தொழில்நுட்பத்தில் வெளியான ‘காமசூத்ரா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் சாய்ராகான். இப்படம் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், நடிகை சாய்ராகான் திடீர் மாரடைப்பால் இன்று மரணம் அடைந்தார். அவரது இறப்பு பாலிவுட் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சாய்ராகான் மரணம் குறித்து கூறிய ‘காமசூத்ரா’ இயக்குநர் ரூபேஷ் பால், “சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது.
காமசூத்ரா படத்தில் நடிக்க அவர் முதலில் சம்மதிக்கவில்லை. அவரை இந்த படத்தில் நடிக்க சம்மதிக்க வைக்க கடினமாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதும் கேரக்டரை உணர்ந்து நடித்தார். இந்த படத்தில் அவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...