’சிந்து சமவெளி’ என்ற சர்ச்சை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்று தொடர்ந்து அடல்ட் ஒன்லி படங்களிலேயே நடித்து வந்த நிலையில், முதல் முறையாக நகைச்சுவை படம் ஒன்றில் நடிக்க தொடங்கியுள்ளார்.
பிரபல நடிகரும் இயக்குநருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராக அறிமுகமாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படம் தான் ஹரிஷ் கல்யாணின் மீதிருந்த அடல்ட் ஒன்லி பட ஹீரோ என்ற இமேஜை மாற்றப் போகிறது. அவரது முந்தைய படங்கள் போல அல்லாமல், முழுக்க முழுக்க கமர்ஷியலான காமெடிப் படமாக இப்படம் உருவாகிறதாம்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில், தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.
தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் கேமராவை ஆன் செய்ய, இயக்குனர் பி.வாசு கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ரெப ஜான் மற்றும் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோத்தி நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...