நடிகைகளின் மீ டூ புகாரை விசாரிப்பதற்காக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நாசர் தலைவராக இருக்கும் இக்குழுவில் பெண் வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதேபோன்ற அமைப்பு மலையாள சினிமாவில் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்த அமைப்பில் உறுப்பினர்களில் ஒருவர் நடிகை சஜிதா மாடத்தில்.
கடந்த 20 வருடங்களாக மலையாள சினிமாவில் முக்கியமான குணச்சித்திர நடிகையாக பயணித்து வரும் சஜிதா மாடத்திலை உதவி இயக்குநர் ஒருவர் அட்ஜெட்ஸ் செய்ய சொல்லி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவை சேர்ந்த கார்த்திக் என்ற உதவி இயக்குநர், தான் இயக்க உள்ள படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சஜிதாவை தொலைபேசி மூலமாக அணுகியுள்ளார். அவரும், படம் பற்றிய விபரங்களை இ-மெயின் அனுப்பினால், அதை பார்த்துவிட்டு பதில் சொல்கிறேன், என்று கூறியிருக்கிறார்.
அதன் பிறகு, அந்த உதவி இயக்குநர் வழிந்தபடியே “நீங்கள் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டியிருக்கும், உங்களால் முடியுமா?” என்று கேட்டாராம். கோபத்தில் அந்த உதவி இயக்குநர் திட்டி தீர்த்த நடிகை சஜிதா, தனது முகநூல் பக்கத்தில் அந்த நபரின் தொலைபேசி எண்ணை போட்டு, இந்த நபரை அனுசரித்து நடிக்க விருப்பம் உள்ள பெண்கள், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என பதிவுட்டு, அவரை அம்பலப்படுத்தியுள்ளார்.
https://www.facebook.com/sajitha.madathil/posts/10156361866901089
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...