காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தற்போது காவல் நிலையத்தில் இருப்பது அனைவரும் அறிந்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்த இவர்கள், தற்போது மீண்டும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி வருகிறார்கள்.
தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும், இவர்கள் ஒருவர் மீது ஒருவர் கூறும் புகாரால், இவர்களது குடும்ப பிரச்சினையை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தாடி பாலாஜி, தனது மகள் போஷிகாவை பார்க்க அனுமதிக்க வேண்டும், என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாரம் ஒரு முறை பாலாஜி அவரது மகளை பார்க்க அனுமதிக்க வேண்டும், என தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்து பாலாஜி கூறுகையில், “என் மகளின் படிப்பு செலவை நானே பார்த்துக் கொள்கிறேன். என் பலமே என் மகள் தான். அவரை வைத்து என்னை வீழ்த்த நித்யா நினைக்கிறார். நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் எனக்கு நியாயம் கிடைத்துள்ளது. இதற்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...