Latest News :

தமிழக அரசு விருதால் உற்சாகமடைந்த ஜீவா!
Monday July-17 2017

தமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012 க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் ஜீவா தேர்வாகியுள்ளார்.

 

2012ல்  கெளதம் வாசுதேவ் மேனன் . இயக்கத்தில்  'நீதானே என் பொன் வசந்தம்'  படத்தில்  நடித்ததற்காக அவர்  இவ்விருதைப்  பெறுகிறார்.

 

இது பற்றி நடிகர்ஜீ வா பேசும் போது "ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம்  . கிடைக்கிற விருது அங்கீகாரம் கலை ஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும்.  அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும். அவ்வகையில் 'நீதானே என் பொன் வசந்தம்' படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம்  .இப்படி பேசப்படும் வகையில்  அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார். அந்தப் படத்துக்காக  என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள  தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன். உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக் குழுவினருக்கும் என் நன்றி.இந்த நேரத்தில்  என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன். அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங் களுக்கு  விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக்  கலைஞரகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு நடிகர் ஜீவா  கூறியுள்ளார்.

Related News

47

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது மகிழ்ச்சி! - சீமான் பாராட்டு
Saturday October-11 2025

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்...

இளம் நெஞ்சங்களையும், இசை பிரியர்களையும் கொள்ளை கொண்ட “நீ என்னை நெருங்கையிலே...” பாடல்!
Saturday October-11 2025

திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்...

Recent Gallery