Latest News :

விவசாயி மகளுக்கு 'திருமாங்கல்யம்' பரிசு - அபி சரவணன், கோபி வழங்கினார்கள்
Thursday September-07 2017

விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் நடிகர் அபி சரவணன், தன்னைச் சேர்ந்த் சினிமா பிரபலங்கள் பலரையும் விவசாயிகளுக்கு உதவிகள் செய்ய வைத்து வருகிறார்.

 

மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவும்படி, விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொண்ட இளங்கீரன் என்பவர் அபி சரவணனிடம் கேட்டு கொண்டதற்கு இனங்க, அவர் தயாரிப்பாளர் கோபி என்பவரிடம் உதவி பெற்று விசாயி மகளுக்கு திருமாங்கல்யம் பரிசு வழங்கியுள்ளார்.

 

இது குறித்து அபி சரவணனிடம் கேட்டதற்கு, “இளங்கீரன் அண்ணன் என்னை சமீபத்தில தொடர்புகொண்டு மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் திருமணத்திற்கு உதவ கேட்டுக்கொண்டார்.

 

விவசாயிகளுக்கு உணவளிக்கவே முழுவீச்சாக செயல்படுவதால் இதற்கு யாரை அணுகுவது என்று யோசித்த வேளையில் நடிகர் விமல் அவர்களின் பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.கே . செல்வா சகோ என்னை அரசு பிலிம்ஸ் உரிமையாளர் கோபி அவர்களிடம் அறிமுகபடுத்தினார்.

 

அவரிடம் அறிமுகமாகி மூன்று நிமிடம் மட்டுமே பேசிய நிலையில் உடனடியாக விவசாயி மகளின்  திருமண உதவியை பற்றி பேசினேன். பேசிய மூன்று வினாடியில் உடனே ஒகே., எனக்கூறி இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

 

விவரம் எதுவுமே கேட்கவில்லை, உடனடியாக இளங்கீரன்  அவர்களை தொடர்பு கொண்ட பேசினேன். திருமாங்கல்யம் அன்பளிப்பாக வழங்க முடிவு செய்யப்ட்டது. உடனடியாக கல்யாண் ஜீவல்லரி சென்று அவர்கள் விரும்பிய வடிவில் திருமாஙகலயம் எனது அம்மா கரங்களால் வாங்கப்டடது..

 

திருமாங்கல்ய செலவு போக மீதிதொகை விவசாயிகளின் நேற்றைய ஒருநாள் உணவுக்காக செலவளிக்கப்பட்டது.

 

கேரளாவில் உள்ள ஒரு முதியோர் இலலத்திற்கு ஓணம் சமபந்தி விருந்திற்கு சிறப்பு விருந்திராக செல்ல வேண்டி இருந்ததால் எனது தந்தை ராஜேந்திர பாண்டியன் மற்றும் .கோபி அவர்கள் சார்பில் மன்னார்குடி நேரடியாக  சென்று மணமகளிடம் திருமாங்கல்யம் அளித்து  மேலும் மணமக்களுக்கு பட்டுசேலை வேஷ்டியுடன் ஆசியளித்து திரும்பினார.” என்று தெரிவித்தார்.

Related News

470

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

விஜய் ஆண்டனி என் குடும்பத்தில் ஒருவர் - ஷோபா சந்திரசேகர் பெருமிதம்
Saturday September-13 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...

ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக மீண்டும் களம் இறங்கும் ரமீஸ் ராஜா!
Friday September-12 2025

’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...

Recent Gallery