Latest News :

’காஞ்சனா 3’ யில் அகோரியாக நடித்து அசத்திய சம்பத் ராம்! - குவியும் பாராட்டுக்கள்
Wednesday April-24 2019

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால், ‘காஞ்சனா 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, படமும் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.

 

படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.60 கோடியை வசூலித்து பெரும் சாதனைப் படைத்திருக்கிறது. இதற்கு காரணம் படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, படத்தில் இடம்பெற்ற வித்தியாசமான கதாபத்திரங்களும், அவர்களது நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

 

காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்தம் ராம், ‘காஞ்சனா 3’ யில் அகோரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

 

Sampath Ram in Kanchana 3

 

ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த சம்பத் ராம், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வர, ’காஞ்சனா 3’ அவர் நடித்திருக்கும் அகோரி கதாபாத்திரம், அவரையே மறைத்துவிட்டு புதிய சம்பத் ராமை பார்க்க வைக்கிறது.

 

கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குணிந்தபடியே நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பும், அவரது அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால், அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

 

இந்த வேடத்திற்காக பெரிய நடிகர் ஒருவரிடம் முதலில் பேசியிருக்கிறார்கள், சில காரணங்களால் அந்த நடிகர் நடிக்க முடியாமல் போக, சம்பத் ராமுக்கு அகோரி வேடம் போட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரை பார்த்த ராகவா லாரன்ஸ், ”இவரே சரியா இருக்கிறாரே, இவரை நடிக்க வச்சிரலாம்”, என்று கூறி சம்பத் ராமை நடிக்க வைத்திருக்கிறார்.

 

Actor Sampath Ram

 

முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால், நடிப்பையும் வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்த சம்பத் ராம், அந்த வேடத்திற்காக ரொம்பவே மெனக்கட்டதோடு, அந்த கதாபாத்திரன் நடை, பாவனை, டயலாக் டெலிவரி உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி, நிஜ அகோரியாகவே மாறி லாரன்ஸ் முன்பு நின்று பர்பாமன்ஸ் செய்ய, அவர் அசந்துவிட்டாராம். பிறகு சம்பத் ராமின் போஷன் முடிந்த பிறகு, அவரை லாரன்ஸ் எங்கு பார்த்தாலும், ”அசத்திட்டிங்க, சூப்பரா வந்திருக்கு..” என்று பாராட்டுவாராம்.

 

ராகவா லாரான்ஸின் பாராட்டு சந்தோஷத்தை கொடுத்தாலும், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ, என்று பயந்த சம்பத் ராம், படம் வெளியான பிறகு பெரும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சென்ற இடமெல்லாம் அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்களாம்.

 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு ‘காஞ்சனா 3’யிலும் அந்த அகோரி வேடத்தில் சம்பத் ராம் தான் நடித்திருப்பதால், தற்போது தெலுங்கு சினிமாவை அவரது நடிப்பு குறித்து பாராட்டி வருகிறது. அதேபோல், மலையாளத்தில் நேரடியாக தமிழில் வெளியான ‘காஞ்சனா 3’ கிடைத்திருக்கும் வரவேற்பை போல, சம்பத் ராமின் அகோரி வேடத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் சம்பத் ராம் முக்கிய நடிகராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் சம்பத் ராம், அப்படத்தின் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது விபத்துக்கு உள்ளாகி உடல் நிலை முடியாமல் போனாலும், படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியவர், திடீர் உடல் நிலை பாதிப்பால் அவதிப்பட, மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே அவரது நெஞ்சில் ரத்தம் கட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனே மருத்துவர்கள் அவரை அட்மிட் ஆக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய தினத்தில் தான் காஞ்சனா 3 படப்பிடிப்பு இருப்பதோடு, சம்பத் ராம் இடம்பெறும் அந்த காட்சியில் கோவை சரளா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இருப்பதால், தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்க கூடாது என்று, அந்த வலியையும் பொருட்படுத்தாமல் நடிக்க கிளம்பியிருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவோ அறிவுறுத்தியும், நடிப்புக்கு முதலிடம் கொடுத்தவர், நெஞ்சு வலியை தாங்கிக் கொண்டு அந்த காட்சியில் நடித்திருக்கிறார். இதை அறிந்த லாரன்ஸ், அவருக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் படப்பிடிப்பில் தயார் நிலையில் வைத்திருந்தாராம். கடவுள் அருளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், சம்பத் ராம், நல்லபடியாக நடித்து முடித்துவிட்டு பிறகு மருத்துவமனையில் அட்மி ஆகி சிகிச்சை பெற்றிருக்கிறார்.

 

Sampath Ram in Kanchana 3

 

தற்போது, எப்போதும் போல பூரண உடல் நிலையுடன் ஆக்டிவாக மீண்டும் படப்பிடிப்புகளில் பிஸியாகியிருக்கும் சம்பத் ராம், பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு,  சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புது படம் ஒன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயராக உள்ள ‘1945’ படத்திலும் சம்பத் ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டயின் ’கொலைகாரன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

 

இப்படி முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் பல முக்கியமான வேடங்களில் நடித்து வரும் சம்பத் ராம், படத்திற்கு படம் தனது நடிப்பு திறமையை நிரூபிப்பதோடு, வில்லனாக மட்டும் இன்றி நல்ல குணச்சித்த வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

Related News

4700

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery