விபத்தில் சிக்கி காயமடைந்த ஊழியரை சந்தித்த விஜய்! - வைரலாகும் புகைப்படம்
Thursday April-25 2019

விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள புறநகர்ப் பகுதியில் பிரம்மாண்ட செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது. விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 

ஏராளமான ஊழியர்கள் இரவு பகலாக இந்தப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு 100 உயரத்தில் கிரேனில் கட்டிவைக்கப்பட்டிருந்த அதிக திறன் கொண்ட மின்விளக்குகளில் ஒன்று கழன்று கீழே விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ் என்பவரது தலையில் விழுந்தது.

 

52 வயதாகும் செல்வராஜ் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்ததோடு, செல்வராஜை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். 

 

இந்த நிலையில், இந்த தகவலை அறிந்த நடிகர் விஜய் மருத்துவமனைக்கு நேரில் சென்று செல்வராஜியை நலம் விசாரித்ததோடு, அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறியுள்ளார்.

 

விபத்தில் சிக்கிய தொழிலாளரை விஜய் நேரில் வந்து பார்த்தது, சினிமா தொழிலாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

 

இதோ அந்த புகைப்படம், 

 

Vijay in Hospital

Related News

4706

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery