பாலிவுட் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப், தமிழ் சினிமாத் துறை மற்றும் இயக்குநர்கள் மீது பெரிய மதிப்பு வைத்திருக்கிறார். இந்திய சினிமாவில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, இந்திய அளவில் வெளியாகும் நல தரமான படங்களுக்கும், படைப்பாளிகளையும் பாராட்டியும் வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பதோடு, அவருக்கு விருந்து வைத்து கெளரவித்தும் இருக்கிறார்.
‘காலா’ மற்றும் ‘பரியேறும் பெருமாள்’ படங்களை சமீபத்தில் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், பா.இரஞ்சித்தை வர சொல்லி பாராட்டியதோடு, காலா மற்றும் பரியேறும் பெருமாள் படங்கள் குறித்து சிலாகித்து பேசியவர், அப்படங்களில் இருக்கும் அரசியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
மேலும், ”இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று தனது விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கூறிய இயக்குநர் பா.இரஞ்சித், “உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காலா, பரியேறும் பெருமாள் குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம், என்றார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...