ரசிகர்களை ஏமாற்றமடைய செய்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’!
Friday April-26 2019

பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே இன்று அவெஞ்சர்ஸ் சீரிஸின் இறுதிப் படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, இதுவரை செய்யாத பல விஷயங்களை படக்குழு செய்தார்கள்.

 

இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை வசனம் எழுத வைத்ததோடு, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து பாடல் ஒன்றையும் உருவாக்கினார்கள். மேலும், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா ஆகியோரை டப்பிங்கும் பேச வைத்தார்கள். இப்படி பல வகையில் இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்ததோடு, இதுவரை அவெஞ்சர்ஸ் வரிசை படங்களை பார்க்காதவர்களையும், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை பார்க்க வைக்க வேண்டும் என்று இந்தியா மார்வெவ்ல் நிறுவனம் பல கோடிகளை வாரி இறைத்தது.

 

இதற்கிடையே, படம் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளங்களில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், படத்தின் வசூல் பாதிக்க கூடும் என்று படக்குழுவினரும் அச்சம் அடைந்துள்ளனர்.

 

இந்த நிலையில், இன்று வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு மாஸ் ஹீரோக்களின் படங்களைப் போல காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

 

பெரும் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் காலை சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். முந்தைய அவெஞ்சர்ஸ் படங்களை போல இந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் இல்லையாம்.

 

இன்று காலை பெங்களூரில் படம் பார்த்த ரசிகர்கள் பலர், “இந்தப் படம் முந்தைய படங்களைப் போல இல்லை. பெரும் எதிர்ப்பார்ப்புடன் வந்து ஏமாந்துவிட்டோம்.” என்று புலம்புகின்றனர். மேலும், இரண்டு சூப்பர் ஹீரோக்கள் படத்தில் இறந்துவிடுவதால், படம் இன்னும் மொக்கையாகி விடுகிறது, என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Related News

4711

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery