ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி தற்போதும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரிய ஓபனிங்கோடு வெளியான படம் வசூலி பல சாதனை படைத்து வருகிறது.
இதற்கிடையே, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் ராகவா லாரன்ஸை தொடர்ந்து விமர்சித்து வந்ததாலும், அவரது அரவனைப்பில் இருக்கும் மாற்றுத்திறனாளி நடன கலைஞர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் தகாத செயலில் ஈடுபட்டதாலும், தனது கண்டனத்தை மறைமுகமாக சீமானுக்கு தெரிவித்தவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களை திருத்துமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து, சீமானும் நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, ராகவா லாரன்ஸுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை, என்றும் கூறினார்.
இந்த நிலையில், சம்மந்தப்பட்டவர் மீது, ராகவா லாரன்ஸின் ஆதரவாளர்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அறிந்த ராகவா லாரன்ஸ், தனது ரசிகர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், ”என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.
என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப் பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதை யே செய்வோம், அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும்..
எனக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மும்பையில் ’காஞ்சனா’ இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம், கடவுள் நமக்கான நல்லதை செய்வார்.
நமக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மை பற்றி புரிந்து கொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...