ஹாலிவுட் படங்களில் வரும் கற்பனை சூப்பர் ஹீரோக்களுக்காக தனி ரசிகர்கள் பட்டாளே இருக்கிறது. அதிலும், அத்தனை சூப்பர் மேன்களை இணைத்து உருவாக்கப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் ‘அவெஞ்சர்ஸ்’ சீரிஸ் படங்களின் இறுதிப் படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றியோடு வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கோடை விடுமுறை என்பதால் வெளியான நாளில் இருந்தே ஹவுஸ் புல் காட்சியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ‘அவெஞ்சர்ஸ்’ படத்தை பார்த்த இளம் பெண் ஒருவர் உயிருக்கு போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், முக்கிய நடிகர்கள் படத்தில் இறப்பதை தாங்க முடியாமல் கதறி கதறி அழுதிருக்கிறார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மிகவும் கஷ்ட்டப்பட்டிருக்கிறார். இதனால் திரையரங்கில் பெரும் பதற்றம் நிலவ, உடனடியாக அந்த பெண்ணுடன் வந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகே அவர் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...