Latest News :

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் படத்தலைப்பு அறிவிப்பு!
Friday September-08 2017

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் அரசிய நையாண்டி படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பேரனான அருள்நிதி ‘வம்சம்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, தொடர்ந்து ‘மெளனகுரு’, ‘டிமாண்டி காலணி’, ‘ஆறாது சினம்’, ‘பிருந்தாவனம்’ என்று அடுத்தடுத்த தனது படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்யும் அருள்நிதி, நடிக்கும் படம் என்றாலே அவை நன்றாக இருக்கும், என்ற மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திய அருள்நிதி அரசியல் நையாண்டி படம் ஒன்றில் நடிக்கிறார் என்ற தகவல் கடந்த மாதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தற்போது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தில் நடித்து வரும் அருள்நிதியின் அடுத்த படமாக உருவாக உள்ள இந்த அரசியல் படத்தை கரு.பழனியப்பன் இயக்குவது இன்னும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்த, தற்போது அப்படத்திற்கு ‘புகழேந்தி எனும் நான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டி.இமான் இசையமைக்கிறார்.

 

தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ற படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் அருள்நிதி தீவிர அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Related News

472

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery