முன்னணி நடிகையாக இருந்த போதே திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்வில் நுழைந்த நடிகைகளில் ஜோதிகா முக்கியமானவர். நடிக்க தெரிந்த நடிகை என்பது மட்டும் இன்றி, லக்கி நடிகை என்ற பெயரையும் எடுத்த இவர், கணவர், குழந்தை என்று குடும்ப வாழ்வில் பிஸியானதால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். பிறகு சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ எண்ட்ரியானார்.
அக்கா, அம்மா அல்லது குணச்சித்திர வேடங்கள் மூலம் ரீ எண்ட்ரியாகும் ஹீரோயின்கள் மத்தியில், மீண்டும் நாயகியாகவே எண்ட்ரியானதோடு தனது பழைய வெற்றிக் கொடியை மீண்டும் கோடம்பாக்கத்தில் பறக்கவிட்டுள்ளார். தற்போது பிரம்மா இயக்கத்தில் மகளிர் மட்டும் படத்தில் நடித்துள்ள ஜோதிகா, பாலாவின் இயக்கத்தில் நடித்துள்ள நாச்சியார் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் ஜோதிகா, அடுத்ததாக விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்கிறார். மணிரத்னம் இயக்கும் இப்படத்டில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்க, ஹீரோயினாக ஜோதிகா நடிக்கிறார்.
ஏற்கனவே ‘டும் டும் டும்’ படத்தின் மூலம் மணிரத்னம் தயாரிப்பில் நடித்திருந்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்திலேயே நடிக்க இருப்பது தனக்கு மிகப்பெரிய மகழிச்சியை அளித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...
எம்.பி.என் மூவிஸ் சார்பில் எம்...
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் கபடி அணி, இறுதி போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது...