தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான விஜய் மற்றும் அஜித் இருவரது படங்கள் மற்றும் பிறந்தநாள் என்றால், அவர்களது ரசிகர்கள் பட்டையை கிளப்பி விடுகிறார்கள். இருவரும், வெவ்வேறு வகையில் மாஸ் காட்டினாலும், பெரும்பாலான விஷயங்களில் விஜய் அஜித்தை முந்துவது வழக்கமான ஒன்றாகிவிடுகிறது.
பாக்ஸ் ஆபிஸில் விஜயும், அஜித்தும் மாஸ் காட்டி வர, அதில் இருவரில் யார் பெரியவர், யாருக்கு முதலிடம், என்ற தகவல்களை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதை டிரெண்டாக்கியும் வருகிறார்கள்.
அந்த வகையில், டிவி சேனல்களில் ஒளிபரப்படும் விஜய் படங்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் தகவலை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாக்கி வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் மாஸ் ஹீரோக்களின் படங்களில் எந்த ஹீரோவின் படம் அதிகமான டி.ஆர்.பி ரேட்டிங்கை பெறுகிறது என்பதை டாப் 5 லிஸ்ட்டாக வைத்து வெளியிட்டுள்ளார்கள். அதில், விஜய் தான் முதல் இடம் பிடித்துள்ளார்.
இதோ அந்த பட்டியல்,
Top 5 BARC Ratings For 2019 Movie Premiere
1) Sarkar - 1,69,06,000
2) SeemaRaja - 1,67,66,000 3) #Sandakozhi 2 - 1,37,31,000
4) Petta - 1,00,41,000
5) 2Point0 - 84,04,000
இதற்காக #TRPEmperorThalapathyVIJAY என்ற டேக் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
விஜய் முதலிடம் பிடித்திருக்கும் இந்த டாப் 5 லிஸ்ட்டில் அஜித் இடம் பிடிக்காதது அவரது ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. அதிலும் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை ஊரே கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில், மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘விஸ்வாசம்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியும் அஜித்தால் இந்த டாப் 5 லிஸ்ட்டில் இடம் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ’தண்டகாரண்யம்’...
சிறு முதலீட்டு படங்களாக இருந்தாலும், மக்களை கவரும் வகையிலான கதை மற்றும் திரைக்கதையோடு வெளியாகும் பல படங்களில் வெற்றி பெற்று வருகிறது...
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என்...