ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ’முனி’ யின் நான்காம் பாகமாகவும், ’காஞ்சனா’ வின் மூன்றாம் பாகமாகவும் வெளியான ‘காஞ்சனா 3’ ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கலவையான வினர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் வசூல் என்னவோ பட்டையை கிளப்பி வருகிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் அத்தனை திரையரங்குகளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக படம் ஓடுவதோடு, சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று குடும்ப குடும்பமாக படம் பார்க்க வருவது திரையரங்க உரிமையாளர்களை பெரும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
இந்த நிலையில், 10 நாட்களில் ரூ.130 கோடி வசூலித்திருக்கும் ‘காஞ்சனா 3’ நடிகர் ராகவா லாரன்ஸை ரஜினி, விஜய் வரிசையில் மாஸ் ஹீரோவாகவும், அதிகமான ஷேர் கொடுத்த ஹீரோவாகவும் உட்கார வைத்திருக்கிறது.
‘காஞ்சனா 3’ யின் தமிழக ஷேர் மட்டும் ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடி வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினி, அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு பிறகு அதிகம் ஷேர் கொடுத்த நடிகர்கள் பட்டியலில் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...
குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...