தனது கவர்ச்சியால் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த சோனா, பிறகு தனது பரபரப்பான பேட்டிகள் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது “சோனா எங்கே போனார்” என்று ரசிகர்கள் கேட்கும்படி, அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க, சோனா ரிட்டர்ன் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் சோனா நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்காக சோனா தனது உடல் எடையை 7 கிலோ வரை குறைத்திருக்கிருக்கிறார். மேலும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் சோனா, இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார்.
க்ரைம் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. அதில் சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டு சோனா கொடுத்திருக்கும் போஸ் செம பேமஸாகியுள்ளது.
மலையாள சினிமாவில் பிரபலமாக உள்ள சோனா, இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவை கலக்குவார் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...
’டார்லிங் - 2’(2016) ஹாரர் காமெடி படத்தையும், ’விதிமதி உல்டா’ (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா...