Latest News :

ஒரே படத்தில் 9 வேடங்கள் போடும் ஜெயம் ரவி!
Saturday May-04 2019

’அடங்க மறு’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் அடுத்த படமாக ‘கோமாளி’ வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் எமொஷனலை மையமாக வைத்து உருவாகியுள்ள இபப்டத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பி ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கிறார்.

 

தற்போது படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் தொடங்கியிருக்கும் நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்திருக்கும் தகவலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர.

 

இது குறித்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், “நாங்கள் நகைச்சுவை அம்சங்களை கொண்ட குடும்பத்துடன் ரசிக்கும் முழுநீள பொழுதுபோக்கு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளோம். கடந்த சில ஆண்டுகளாகவே, ஜெயம் ரவி சார் தனி ஒருவன் மற்றும் அடங்க மறு போன்ற திரைப்படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிப்பதையே பார்த்து வந்திருக்கிறோம். இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஜெயம் ரவி சார் 9 வித்தியாசமான தோற்றங்களில் தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். யோகிபாபு ஒரு வழக்கமான நகைச்சுவை நடிகராக இல்லாமல், ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க இருப்பார். கே.எஸ்.ரவிகுமார் சார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் ஆகியோர் படத்தின் நகைச்சுவை காட்சிகளை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றிருக்கிறார்கள். YouTube பரிதாபங்கள் புகழ் RJ ஆனந்தியை இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். அவர் ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காஜல் அகர்வால் ஒரு நல்ல அனுபவமுள்ள நடிகை, அவர் எப்போதும் நடிப்பை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார். ஒவ்வொரு முறையும், ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் ஜோடியை நான் பார்க்கும் போது, ஒரு மேஜிக்கை உணர்வேன். ரசிகர்களும் அதை உணர்வார்கள் என நம்புகிறேன். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பெண் கதாபாத்திரம் இந்த கதைக்கு தேவைப்பட்டது. அத்துடன் அவர் சிறப்பாக நடிப்பவராகவும் இருக்க வேண்டும்.  எனவே கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே அதை சரியாக செய்வார் என்று நினைத்து அவரை நடிக்க வைத்திருக்கிறோம். கன்னட படமான கிரிக் பார்ட்டி மூலம் தென்னிந்திய சினிமாவில் பரபரப்பான நடிகையாக புகழ் பெற்றவர் அவர். அவரது நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும், பாராட்டப்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.” என்றார்.

 

ஹி ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களும் பேசப்படும் விதத்தில் வந்துள்ளதாம். அதிலும், “பைசா நோட்டு..” என்ற பாடல் இசைக்காகவும், தயாரிப்புக்காகவும் பெரிதும் பேசப்படுமாம்.

Related News

4745

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

’பல்ஸ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday December-23 2025

குளோபல் பிக்சர்ஸ் அழகராஜ் ஜெயபாலன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் பல்ஸ் திரைப்படத்தை நவீன் கணேஷ் இயக்கியிருக்கிறார்...

படம் வெளியாவதற்கு முன்பே ‘சிறை’ இயக்குநருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
Tuesday December-23 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்...

Recent Gallery