ஜோதிகா, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகளிர் மட்டும்’ விரைவில் வெளியாக உள்ளது. ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கியுள்ள இப்படம் பெண்களுக்கான படமாகும்.
சாலை பயணம் ஒன்றில், மருமகள் ஒருவர் தனது மாமியாரையும் அவரது நண்பர்களையும் எப்படி பார்த்துக் கொள்கிறார் என்பது தான் இப்படத்தின் கதை.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜோதிகா கூறுகையில், “இந்த கதை எப்படி ஒரு ஆணிடம் இருந்து வந்தது என எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஊர்வசி , சரண்யா பொன்வண்ணன் , பானுப்ரியா ஆகியோரோடு இனைந்து நடிக்கும் போது சிறிது பயமாக இருந்தது. எங்கள் முதல் நாள் படபிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை கூறி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும் தான் என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள். நான் ஊர்வசியிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
நான் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா 2 நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஷீபா என்ற பயிற்சியாளர் ஒருவர் எனக்கு புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். நான் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்து சென்று டிராப் செய்த போது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதும் ஹீரோ. நாச்சியார் படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன். நான் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிமுக்கு சென்று வருகிறேன். நான் என்னோடு நடித்த சக நடிகர்களை விட ஐந்து வயதாவது இளமையாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் தற்போது முக்கியம்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் தான் இறுதிசுற்று என்று ஒரு படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நிலை மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள் யாரும் அறியாத ஹீரோஸ்.” என்று தெரிவித்தார்.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...