தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக உள்ள விஜயை வைத்து படம் இயக்கவும், தயாரிக்கவும் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இருப்பினும், விஜய் பார்வை யார் மீது படுகிறதோ, அவர்கள் தான் அவரை வைத்து இயக்கவும் முடியும், படம் தயாரிக்கவும் முடியும், என்ற நிலை தான் இருக்கிறது.
தற்போது, அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்து வரும், அவரது 63 வது படம் விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கிறது. ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பிரபல எழுத்தாளர் ஒருவர் தான் எழுதிய புத்தகத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு, அதில் விஜயை ஹீரோவாக நடிக்க வைக்க பல மாதங்களாக போராடி வருகிறார்.
’தி ஹைவே மாஃபியா’ (The Highway Mafia) என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமானவர் எழுத்தாளர் சுஜித்ரா எஸ்.ராவ். இவர் தற்போது இந்த புத்தகத்தை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், இதில் விஜயை ஹீரோவாக நடிக்க வைக்கவும் விரும்புகிறார். அவரை தவிர வேறு யார் நடித்தாலும், இந்த கதைக்கு சரியாக வராது, என்று கூறும் சுஜித்ரா, விஜய் நடித்தால் மட்டுமே, இந்த கதையை திரைப்படமாக எடுப்பேன், இல்லை என்றால், படமாக எடுக்கும் முயற்சியை கைவிட்டுவிடுவேன், என்று கூறியுள்ளார்.
மேலும், விஜய் ரசிகர்கள் அளித்த ஊக்கத்தினாலேயே, விஜயிடம் கதை சொல்லும் முடிவுக்கு தான் வந்ததாக கூறுபவர், தான் ஒரு தீவிர விஜய் ரசிகை. உண்மையான ரசிகரை மதிக்கக்கூடிய ஒருவர் விஜய். அதனால் அவர் என் கதையில் நடிக்க சம்மதிப்பார், என்று நினைக்கிறேன், என்றும் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் சுஜித்ரா, தான் அளிக்கும் பேட்டி அனைத்திலும், விஜய் தான் தனது கதையில் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்று கூறி வந்தாலும், இது குறித்து விஜய் தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்போ கருத்தோ இதுவரை வெளியாகவில்லை.
காத்திருக்கும் எழுத்தாளரை, விஜய் கண்டுக்கொள்வாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...